×

14 மாநிலங்களில் ஒரு தொகுதி கூட கிடைக்காது பாஜவுக்கு வெறும் 214 சீட்தான்: ஆர்எஸ்எஸ் சர்வே என்று கூறி இணையத்தில் வைரல்

புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்திய சர்வே என்று கூறி இணையத்தில் வைரலாக பரவி வரும் தகவலின்படி பாஜவுக்கு 214 சீட் தான் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேற்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் சர்வே என்ற பெயரில் தகவல் ஒன்று பரவியது. அதில், பாஜவுக்கு மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 214ல் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதன்படி, தமிழ்நாடு, புதுவை, கேரளா, ஆந்திரா உட்பட 14 மாநிலங்களில் பாஜவுக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றிக் கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் பீகாரில் மொத்தமுள்ள 40தொகுதியில் 9, உ.பியில் 80 தொகுதியில் 65, ம.பியில் 29ல் 24, குஜராத் 26ல் 23, ராஜஸ்தானில் 25ல் 16, மகாராஷ்டிராவில் 48ல் 11, மேற்கு வங்கத்தில் 42ல் 9, கர்நாடகவில் 28ல் 6, தெலங்கானாவில் 17ல் 1, பஞ்சாபில் 13ல் 2 தொகுதியில் மட்டுமே பாஜவுக்கு வெற்றி கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பிரதமர் மோடி 400 தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று கூறிவரும் நிலையில், இந்த சர்வே முடிவுகள் பாஜவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சர்வே குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நேற்று இரவு வரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

The post 14 மாநிலங்களில் ஒரு தொகுதி கூட கிடைக்காது பாஜவுக்கு வெறும் 214 சீட்தான்: ஆர்எஸ்எஸ் சர்வே என்று கூறி இணையத்தில் வைரல் appeared first on Dinakaran.

Tags : BJP ,RSS ,New Delhi ,Twitter ,Dinakaran ,
× RELATED ஜனநாயகத்தின் மீது தொடர் தாக்குதல்...